நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்
23-07-2012 04:34 PM
Comments - 0       Views - 469
(ஜெ.டானியல்)

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாள்கள் நடைபெறவுள்ளது.

ஓகஸ்ட் 2ஆம் திகதி வியாழக்கிழமை மஞ்சம் மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை திருவிழாவும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தான கோபாலர் திருவிழாவும் அன்று மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறும்.

ஓகஸ்ட் 13ஆம் திகதிகாலை கஜவல்லி, மகாவல்லி திருவிழாவும் மாலை வேல் விமானமும் இடம்பெறும். 14ஆம் திகதி தண்டாயுதபாணி திருவிழாவும் மாலை ஒருமுகத் திருவிழாவும் 15ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் இடம்பெறும்.

ஓகஸ்ட் 16ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறும். மறுநாள் 17 ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். 18ஆம் திகதி பூங்காவனமும் 19ஆம் திகதி வைரவர் திருவிழாவும் இடம்பெற்றுத் திருவிழா நிறைவடையும்.
"நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty