ஸ்ரீ பள்ளயப் பேச்சியம்மன் ஆலய தீமிதிப்பு
20-06-2012 12:09 PM
Comments - 0       Views - 519

(ஆர்.அனுருத்தன், ஜவீந்திரா)

மட்டக்களப்பு, வாழைச்சேனை ஸ்ரீ பள்ளயப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 08ம் திகதி ஆரம்பமாகி நேற்று செவ்வாய்க்கிழமை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இறுதி நாள் உற்சவத்தன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

பின்னர் பள்ளையப் பூசை முடிந்ததும் கும்பம் சொரிவதற்காக வாழைச்சேனை இந்து சமூத்திரத்திற்கு சென்று கும்பம் சொரிந்தனர். சடங்கு உற்சவம் முடிவடைந்ததும் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.


"ஸ்ரீ பள்ளயப் பேச்சியம்மன் ஆலய தீமிதிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty