பெண்களற்ற சூழலில் உடற்பயிற்சியில் சிறந்த பெறுபேறை அடையும் ஆண்கள்
09-05-2012 04:52 PM
Comments - 0       Views - 3218
உடல் பருமனை குறைப்பதற்காக உடற் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் ஆண்கள், தமக்கருகில் பெண்கள் இல்லாத சூழலில் இரண்டு மடங்கு எடையை இழப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் ஆண்கள் மட்டுமே இருக்கும் சூழல் அவர்களது வெற்றியைத் தீர்மானிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆண்களை மாத்திரம் கொண்ட உடற்பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஆண்கள் 12 வாரங்களில் சுமார் 6 கிலோ எடையை குறைக்கின்றனர்.

ஆனால், பெண்களும் பங்குக்கொள்ளும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்லும் ஆண்கள் இதில் அரைப் பங்கு எடையை – சுமார் 3 கிலோ - மாத்திரமே குறைத்திருந்தாதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களற்ற ஆண்கள் பங்குக்கொள்ளும் உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி பெற்ற ஆண்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் ஒன்றரை இறாத்தல் நிறையை குறைத்திருந்ததுடன் அவர்களது சாதாரண இடையின் அளவைவிட இரண்டு அங்குல இடையும் குறைக்கப்பட்டிருந்தது.

பெண்களுக்கு முன்னால் தமது பருமானான உடற்பருமன்  குறித்து கலந்துரையாடுவதற்கு ஆண்கள் சிலர் வெட்கப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என  பிரான்ஸ் லியோனில் அமைந்துள்ள, உடல் பருமன் தொடர்பான ஐரோப்பிய காங்கிரஸ் கூட்டமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களை மட்டும் கொண்ட சூழலையே மிகவும் பாதுகாப்பானாதாக விரும்புகின்றார்கள். மற்றும் அவர்களது போட்டி மனப்பாங்கிலும் முன்னேற்றம் உள்ளது.

பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேன்ட் பகுதியில் பெண்களற்ற உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபடும் எடைமிகுந்த ஆண்கள் 62 பேர் இத்தகயை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, ஆண்கள் பலர் ஊளைச்சதை கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் பெண்களை விட அதிக பருமன் உடையவர்களாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

"பெண்களற்ற சூழலில் உடற்பயிற்சியில் சிறந்த பெறுபேறை அடையும் ஆண்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty