உங்கள் படுக்கையறையை ரம்மியமாக்குங்கள்
14-06-2012 10:28 AM
Comments - 1       Views - 3547
சராசரியாக நபரொருவர் ஒருவருடத்தில் 3000 மணித்தியாலங்களை நித்திரைக்காக செலவிடுகின்றார். மனிதர்கள் நிம்மதியை பெறும் இடமென்றால் அது நித்திரையொன்றில் மட்டும்தான். அதனால்தான் அதிகமான நேரங்களை மனிதர்கள் உறக்கத்திற்காக செலவிடுகின்றனர்

நிம்மதியான உறக்கத்திற்காக ஏங்குவோர் பலர் இன்று எம்மில் வாழ்கின்றனர். சிலர் நல்ல உறக்கத்திற்காக நித்திரைகுளிசைகளையும் எடுத்துக்கொள்கினறனர்.

நீண்ட உறக்கத்திற்கு நமது படுக்கையறையும் ஒரு காரணமாக அமைவது உண்டு. படுக்கையறை சுத்தமாகவும் அழகாகவும் கவர்ச்சி மிக்கதாகவும் இருந்தால் நித்திரையென்பது சுகமான சொர்க்கமாகவே தெரியும். அதனால் உங்களது படுக்கையறைகளை சொர்க்கமானதாக மாற்றுவதற்கு முயன்று பாருங்கள்.

செழிப்பான படுக்கையறை

உங்களது படுக்கையறையை வியக்கத்தக்க வகையில் மாற்ற விரும்பினால் மற்றும் சுவாரஷ்யமிக்கதாக மாற்ற விரும்பினால் படுக்கையறையின் சுவற்றுக்கு துடிப்பான வர்ணங்களை கொண்டு வர்ணம் பூசுங்கள். கபிலம், சிவப்பு, இளம் சிவப்பு போன்ற வர்ணங்களைக் கொண்டு படுக்கையறையின் சுவற்றை அலங்கரிக்கலாம்.

இரும்பு அல்லது மரத்தினால் செய்யப்பட்ட கட்டிலை தேர்ந்தெடுங்கள். கட்டிலுக்கு தேவையான கவர்ச்சிமிக்க மெத்தைகளை இடுங்கள்.

எப்போதும் படுக்கையறையில் அதிகமான பொருட்களை வைத்து திணிப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது. காற்றானது எல்லா இடங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் படுக்கையறை அமைக்கப்பட வேண்டும். எலிகளும், கரப்பொத்தான் பூச்சிகளும் தங்கும் உறைவிடமாக உங்களது படுக்கையறையை வைத்துக்கொள்ளாதீர்கள். சிலரது வீட்டில் நுளம்புகள் அதிகம் பெறுகும் இடமாக படுக்கையறை காணப்படுகின்றது.

வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கொண்டு படுக்கையறையில் இருக்கிவிட்டால் நித்திரை என்பது நீங்கள் நினைத்தாலும் வராது.

இயற்கை தன்மை

படுக்கையறை இயற்கைத்தன்மையானதாக காணப்படல் வேண்டும். படுக்கையறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் இயற்கையின் ஸ்பரிசத்தை உணர்த்த கூடிய வகையில் இருப்பது அவசியமானது.

முடிந்தவரை  நடுநிலை வர்ணங்களினால் ஆன தரைவிரிப்பை படுக்கையறையில் பயன்படுத்துங்கள்.

திரைச்சீலைகளானது மெல்லிய நிறங்களினை கொண்டதாக இருப்பது இதயத்திற்கு இதம் தரும் ஒன்றாக இருக்கும்.

சுத்தம்

சுத்தம் என்பது ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் முக்கியமானது. பொதுவாக சிலரது படுக்கையறைக்கு நுழையும் போதே ஒருவகை துர்நாற்றம் வீசும். இதற்கு பிரதான இரண்டு காரணங்களே உள்ளன. ஒன்று படுக்கையறையில் பயன்படுத்தப்படும் போர்வைகள், மெத்தை கவர்கள், திரைச்சீலைகள தலையணை உறைகள் என்பவற்றை எம்மில் பலர் மாதத்திற்கு ஒரு முறையே கழுவுவார்கள். மெத்தை, தலையனை, போர்வைகளில் படியும் வியர்வை மற்றும் அழுக்குகள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றன.

நாம் அலுவலகங்களுக்கு அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது அணியும் ஆடைகளை அப்படியே கொண்டுவந்து அறையில் தொங்கவிட்டுவிடுவோம். இது இன்னும் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதைவிட படுக்கையறை
ஜன்னல்கள் எப்போதும் மூடியே கிடப்பதால் துர்வாடை வீசுவதுண்டு.

இவை படுக்கையறையில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடுகின்றன. படுக்கையறையில் பாவிக்கப்படும் போர்வைகள் தலையணை உறைகள் என்பவற்றை வாரத்திற்கு ஒரு தடவை துவைத்து நன்கு காய வைப்பது சிறந்தது. படுக்கையறை பாவனைப் பொருட்கள் மாற்றி மாற்றி பாவிக்கக் கூடிய வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தலையனை மற்றும் மெத்தைகளை விடுமுறை நாட்களில் வெயிலில் காய வைத்து எடுத்தால் அவற்றில் படிந்திருக்கும் துர்வாடை நீங்கிவிடும்.

'படுக்கையறையில் பெரிதாக குப்பைகள் இல்லைதானே, அவசரத்தில் இதை கூட்டிக்கொண்டு இருக்கத்தான் முடியுமா' என எண்ணாமல்  தினம் முறையாக கூட்டி படிந்திருக்கும் தூசுகளை அகற்ற வேண்டும்.

ஒளி   

பொதுவாக எம்மில் பலர் பிரமாண்டாமான ஒளியில் உறங்க மாட்டார்கள். பலர் இருட்டில் உறங்குவதையே அதிகம் விரும்புகின்றனர்.

படுக்கையறைக்கு ஒளி என்பது அவசியமானது. அந்த ஒளியானது ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியாகவும் சிமில் லாம்பின் ஒளியாக, மின்சக்தி குறைந்த அளவினை உடைய வர்ணங்களிலான மின்குமிழ்களாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.

இந்த ஒளியில் உறங்கும் போது எம்மை அறியாமல் நாம் உறங்கிவிடுவோம். அதிக மின்சக்தியை வெளியிடும் மின்குமிழ்களை நாம் பயன்படுத்தும்போது நிம்மதியான உறக்கத்திற்கு அது கேடுவிளைப்பதோடு மின்சார கட்டணத்தையும் அதிகரித்து விடுகின்றது.
"உங்கள் படுக்கையறையை ரம்மியமாக்குங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Mohamed MMM 17-06-2012 05:47 AM
ஹ ஹ ஹ
Reply .
1
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty