சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் தனியார் விண்வெளி ஓடம்
27-05-2012 05:41 PM
Comments - 0       Views - 1756

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த உலகின் முதலாவது தனியார்  விண்வெளி ஓடமான 'ட்ரகன்' ஓடத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்கள்  பாராட்டியுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த ட்ரகன் விண்கலம் மே 22 ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கனவ்ரலிலிருந்து இக்கலம் கடந்த 22 ஆம் திகதி புறப்பட்டது.

மே 25 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு மேலாக 402 கிலோமீற்றர் உயரத்தில் வைத்து, பூமியை வலம்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ட்ரகன் விண்வெளி ஓடம் அடைந்தது.

சுமார் 24 மணித்தியாலங்களின் பின்னர், ட்ரகன் ஓடத்தின் கதவைத் திறந்து சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் நுழைந்தனர்.

ட்ரகன் ஓடத்தின் உட்புற மணமானது புத்தம் புதிய காரொன்றின் மணத்தை ஒத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரரான டொன் பெட்டிட் கூறினார்.

தனியார் நிறுவனமொன்று தயாரித்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

'பல விடயங்கள் பிழைத்திருக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அது சரியாக முடிந்துள்ளது' என ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தின் பின்னாலுள்ள கோடீஸ்வரரான எலொஸ் முஸ்க் கூறினார்.

விண்வெளி பயண வரலாற்றில் இது முக்கியமானதோர் படியாகும். எதிர்காலத்தில் இத்தகைய பல விண்வெளிப் பயணங்கள் தொடரும் என  தான் நம்புவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

மணி வடிவத்திலான ட்ரகன் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 590 கிலோகிராம் விண்வெளி உபகரணங்கள் ஏற்றப்பட் நிலையில் அடுத்தவாரம் பூமிக்குத் திரும்பவுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது பசுபிக் சமுத்திரத்தில அதை இறக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஷட்டில் விண்வெளி ஓடங்கள் ஓய்வுக்கு வந்ததையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி ஓடங்களிலேயே அமெரிக்காவின் நாசா நிறுவனம் தங்கியிருக்க நேர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஏகபோகத்தை முறியடிக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

எனினும், ஸ்பேஸ்-எக்ஸ் தனியார் விண்கலம் குறித்து சந்திரனில் தரையிறங்கிய இரண்டாவது மனிதரான புஷ் அட்ல்ட்ரின் கருத்துத் தெரிவிக்கையில், 'சந்திரனில் தரையிறங்கி, 43 ஆண்டுகளாகும் நிலையில் விண்வெளித்துறையில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை தொடர்வதற்கான மற்றொரு அடியை நாம் எடுத்துவைத்துள்ளோம்' எனக் கூறியுள்ளார்.
"சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் தனியார் விண்வெளி ஓடம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty