வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10
10-12-2011 12:00 AM
Comments - 1       Views - 810

 

1817 – மிசிசிப்பி நகரம் அமெரிக்காவின் 20ஆவது மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.

1869 – கிழக்கு அமெரிக்காவின் வயோமிங் பிரதேசத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1901 – பிலிப்பைன்ஸ் மீது ஜப்பான் போர் தொடுத்தது.

1953 – உலகப் புகழ்பெற்ற 'ப்ளேபோய்' சஞ்சிகையினை 7600 அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் ஹுக் ஹேப்னெர் ஆரம்பித்தார்.

1964 – நோர்வே – ஒஸ்லோவில் டொக்டர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு நோபல் பரிசு கிடைத்தது. இளவயதில் நோபல் பரிசுபெற்றவர் என்ற பெருமை இவருக்குண்டு.

1996 – தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா புதிய ஜனநாயக அரசியலமைப்பு சட்டமூலமொன்றில் கையொப்பமிட்டார். வெள்ளையர்கள் - சிறுபான்மையினர் என்ற அடிப்படை வாதமின்றி நாட்டினை கட்டியெழுப்புவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2007 – ஆர்ஜன்டீனாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிரிஸ்டினா பெர்ணான்டெஸ் பதவியேற்றார்.

"வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
WINTER 10-12-2011 03:31 PM
மார்டின் லூதர் கிங் நோர்வே ஒஸ்லோ வை சேர்ந்தவர் அல்ல.அவர் அமெரிக்காவின் அட்லாண்ட நகரில் பிறந்த ஒரு "பாஸ்டர்" "சிவில் ரைட்ஸ் அக்டிவிஸ்ட்".
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty