ரமழான் சிந்தனை – 13 (உள நோய்களின் நிவாரணி)
13-08-2011 10:14 PM
Comments - 0       Views - 715

 

நோன்பு பாவங்களை விட்டும் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் மிகச்சிறந்த வணக்கமாகும். உள நோய்கள் என்பன பாவங்களில் மிக மோசமானவைகளாகும். தப்பெண்ணம், பொறாமை, பெருமை, சுயநலம், நயவஞ்சகம், முகஸ்துதி, காழ்ப்புணர்ச்சி போன்ற உளநோய்களை விட்டும் ஒரு மனிதன் தூய்மையடைய வேண்டும்.

இத்தகைய உள நோய்களை தவிர்ந்துகொள்ளுமாறு அல்லாஹூதஆலா அல்குர்ஆனிலே பின்வருமாறு எங்களுக்கு ஏவியுள்ளான். "நபியே நீர் கூறுவீராக நிச்சயமாக எனது இரட்சகன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காணப்படும் கீழ்த்தரமான பாவச்செயல்களை தடுத்துள்ளான்".     

இஸ்லாம் தடுத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது எவ்வாறு ஹராமாகுமோ அதேபோன்று மனிதர்;களின் உள்ளங்களுக்குள் ஊடுருவும் உள நோய்களையும் அது ஹராமாக்கியுள்ளது. உள நோய்கள் வெறும் உள நோய்களாக உள்ளத்தோடு மாத்திரம் சுருங்கிவிடுவதில்லை மாறாக சமூகத்தினுள் ஊடுருவி அதனுள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

குடும்பங்கள் பிளவுபடுவது, இரு சகோதரர்களுக்கிடையிலான உறவு முறிவது, சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான பணிகள் இல்லாதொழிவது போன்றவற்றிற்கு பின்னாலுள்ள பிரதான காரணி உள நோய்களாகும்.

எனவே இத்தகைய அபாயமிக்க உளநோய்களை விட்டும் நோன்பு எனும் உயர்ந்த வணக்கத்துக்கூடாக உள்ளங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ள முனைவோமாக.

 

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

நாளைய (14) தொழுகை நேரங்கள்:

ஸஹர் முடிவு: 04:30

சுபஹ்: 04:45

சூரிய உதயம்: 06:04

லுஹர்: 12:17

அஸர்: 03: 35

மஃரிப்: 06:27

இஷா: 07:40

"ரமழான் சிந்தனை – 13 (உள நோய்களின் நிவாரணி)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty