நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க திகாம்பரம் முடிவு
25-04-2010 12:09 PM
Comments - 1       Views - 3698
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்  ஒரு போதும் அரசுடன் இணையாது , அவ்வாறு தாம் அரசுடன் இணைவதென்றால் முதலில் ஊடகங்களுக்கே அறிவிப்போம் என்று  தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் நாடாளுமனற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையதளம்  சற்று முன் அவருடன் தொடர்புகொண்டு அரசுடன் இணைவது சம்பந்தமாக வினவியது.  இதற்கு பதிலளித்த அவர், தாம் அரசுடன் கூட்டுச் சேரப்போகின்றோம் என்ற  செய்தி ஒரு வதந்தியாகும். அவ்வாறு தாம் அரசுடன் இணைந்தால் மலையக மக்களுக்கு எதனை சாதிக்க முடியும் என்றும்,  தற்போது அரசுக்குள்ள 144 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவியில்லை என்ற நிலையில், தனக்கு அவர்கள் எதனை வழங்குவார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தானும் தனது கட்சி சார்பாக உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து சுயாதீனமாகவே இயங்கத் தீர்மானித்துள்ளோம் என்று பி.திகாம்பரம் குறிப்பிட்டார்.(R.A)

"நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க திகாம்பரம் முடிவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
xlntgson 25-04-2010 08:54 PM
அமைச்சு பதவி கிடைக்காமல் அரசில் சேர உங்களுக்கு என்ன பைத்தியமா, அது தானே? சகோதர அழைப்புக்காக காத்திருங்கள் தோழரே!
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty