பேஸ்புக் ஸ்தாபகருக்குத் திருமணம்
20-05-2012 05:15 PM
Comments - 0       Views - 815

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஸ்தாபகரும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸுகர்பர்க், தனது நீண்டகால காதலியான பிரிஸ்சில்லா சானை திருமணம் செய்துகொண்டுள்ளார்.  சீன வம்சாவளியைச்  சேர்ந்த பிரிஸ்சில்லா சான் மருத்துவப் பட்டதாரியாவார்.

கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ அட்லோ பகுதியிலுள்ள ஸுகர்பேர்க்கின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இத்திருமணம் நடைபெற்றது.

பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பகிரங்க விற்பனைக்குவிடப்பட்டதற்கு மறுநாள் இத்திருமணம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திருமணம் குறித்த தகவலையும் புகைப்படத்தையும்  மார்க் ஸுகர்பர்க் வெளியிட்டார். 30 நிமிடங்களுக்குள் இப்புகைப்படத்தை சுமார் 7 லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.

"பேஸ்புக் ஸ்தாபகருக்குத் திருமணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty