ஷாருக்கான்மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு
21-08-2012 05:53 PM
Comments - 0       Views - 748

தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஹிந்தி திரையுலகின் ஜாம்பவான் ஷாருக்கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலத்தின் அரசியல் கட்சியான லோக் ஜான்சக்தி கட்சியின் தேசிய செயலாளரான ரவி பிரஹ்மி என்பவரே ஷாருக்கான் மீது சதுருஸ்திங்கி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு வழக்குதாக்கலும் செய்துள்ளார்.

கடந்தவருடம் ஏப்ரல் 2ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஷாருக்கான் தேசியக் கொடியை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மூவர்ணங்களைக் கொண்ட இந்திய தேசியக் கொடியை தலைகீழா அசைத்து அக்கொடியை அவமதித்ததாகவே ரவி பிரஹ்மி குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி சதுருஸ்திங்கி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு, தற்சமயம் மும்பை பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மொடலழகி ஒருவர் தேசியக்கொடியை பிகினி உடையாக பயன்படுத்தியமை தொடர்பில் இதே ரவி பிரஹ்மி வழங்கு தாக்கல் செய்து கடந்த 18ஆம் திகதி அப்பெண் கைதுசெய்யப்பட்டு மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஷாருக்கானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் ஷாருக்கானின் முகாமையாளர் கருத்துச்சொல்ல மறுத்திருக்கிறார்.

"ஷாருக்கான்மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty