நடமாடும் கழிவறையை செலுத்துவதில் புதிய உலக சாதனை
04-05-2012 05:24 PM
Comments - 0       Views - 1032

மோட்டார் பொருத்தப்பட்ட நடமாடும் கழிவறையை வேகமாக செலுத்துவதில்  கனடாவைச் சேர்ந்த ஜோன்ஸன் பொட்டம் எனும் பெண் புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

31 வயதுடைய மேற்படி பெண், குறித்த மோட்டார் சைக்கிளை மணித்தியாலத்திற்கு 46 மைல் வேகத்தில் செலுத்தினார். இது முந்தைய சாதனையைவிட மணித்தியாலத்திற்கு 5 மைல் அதிகமாகும்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இச்சாதனையை படைத்தமை  குறிப்பிடத்தக்கது.
இச்சாதனை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நான் நேராக குதித்து இக்கழிவறையில்  அமர்ந்துகொண்டேன். உண்மையில் இது வேடிக்கையான ஓர் அனுபவம். இச் சாதனை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் தனது 11 ஆவது வயதில் மோட்டார் சைக்கிளை செலுத்த ஆரம்பித்துள்ளார். பல்வேறு சாதனைகளை இவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


"நடமாடும் கழிவறையை செலுத்துவதில் புதிய உலக சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty