3 கிலோமீற்றர் நீளமான திருமண ஆடை
13-06-2012 09:11 AM
Comments - 1       Views - 1294

3 கிலோமீற்றர் நீளமுடைய திருமண ஆடையொன்று இத்தாலிய தேவாலயமொன்றின் படிகட்டுக்களில் காட்சிப்படுத்தப்பட்டது. இது மிக நீளமான திருமண ஆடையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி திருமண ஆடையானது கியானி மொலாரோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையின் மொத்த நீளம் 1.86 மைல்கள் (3 கிலோமீற்றர்) ஆகும்.

இந்த ஆடை எலினா டீ ஏஞ்சல் என்பவர் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற திருமணத்தின்போது அணிந்திருந்தார். காரில் மணமகள் அழைத்துச் செல்லப்பட்டபொது அவரது ஆடையை தொண்டர்கள் குழுவொன்று காவிச் சென்றது.

இந்த ஆடையை கியானி மொலாரோவின் புதிய பயிற்சிப்பட்டறையின்போது ரோம் நகரிலுள்ள ட்ரினிட்டா டெய் மொன்ட்டா தேவாலயத்தின் படிக்கட்டுகளில் காட்சிப்படுத்தப்பட்டது. மொடல் அழகியொருவர் இந்த ஆடையை அணிந்தவாறு போஸ் கொடுத்தார்.

இந்த ஆடை தொடர்பில் மொலாரோ  கூறுகையில், இந்த  ஆடையை வடிவமைக்குமாறு கோரப்பட்டமைக்காக நான் கடமைப்பட்டவன். தேவாலயத்திற்கு செல்லும் வழியில் நான் பல்லாயிரக் கணக்கானோரை சந்தித்தபோது அவர்கள் இத் திட்டத்தை வெகுவாக பாராட்டினர்.

நம்பிக்கையையும் சமாதானத்தையும் பிரதிபலிப்பதாக இந்த ஆடை அமைய வேண்டுமென நினைத்தேன். அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோம் என எண்ணுகிறேன். எனது ஆடை வடிவமைப்பாளர் துறையில் இதுவே மிகப் பெரியத் தருணம்'  என தெரிவித்திருந்தார்.

"3 கிலோமீற்றர் நீளமான திருமண ஆடை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
akaran 14-06-2012 12:05 PM
3 கிலோ மீட்டர் துணியில் அரை மீட்டர் கூட உடம்பில் இல்லை
Reply .
0
2
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty