கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 57 ஆவது பதிப்பு
13-09-2012 04:40 PM
Comments - 0       Views - 2885

2013 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகம் பல்வேறு விநோத சாதனைப் பதிவுகளுடன் வெளியிடப்படவுள்ளது.

இந்த 57 ஆவது பதிப்பானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 22 மொழிகளில வெளியிடப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நூல் உலகளவில் 2.7 மில்லியன் பிரதிகள் விற்பனையாகுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக வயதான ஜிம்னாஸ்டிக் பெண்,  உலகில் மிகப்பெரிய துப்பாக்கி, லண்டனை தளமாக கொண்ட சுமோ மல்யுத்த வீரர் சரான், அதிக உயரமான நாய், மிகப்பெரிய 'பைசெப்ஸ்' கொண்ட உடற்கட்டழகு வீரர் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இப்புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

203.21 கிலோகிராம் நிறையுடைய  உலகின் அதிக எடையுள்ள விளையாட்டு வீராங்கனையென அழைக்கப்படும் எலெக்ஸென்டர் போன்றவர்களை பற்றிய விபரங்களும் இப்புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 


"கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 57 ஆவது பதிப்பு " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty