அரசியல் நகர்வுகளால் பங்குச்சந்தை நடவடிக்கைகள் சற்று முன்னேற்றம்
20-05-2012 10:56 AM
Comments - 0       Views - 190

- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை குறித்த செய்திகள் கடந்தவாரம் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக பங்கு முகவர்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கடந்த புதன்கிழமை இரு பிரதான சுட்டிகளும், சுமார் 80 புள்ளிகள் வரை அதிகரிப்பை காண்பித்திருந்தன. கடந்தவாரத்தை பொறுத்தமட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொடுக்கல் வாங்கல்கள் பின்னடைவை பதிவு செய்திருந்தாலும், பெருமளவான தனிநபர் பங்குதாரர்கள் கொடுக்கல் வாங்கல்களில் அதிகளவில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5222.09 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 4693.59 ஆகவும் அமைந்திருந்தது.

மே 14ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,557.143.580 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 26,375 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 25,459 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 916 ஆகவும் பதிவாகியிருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த பங்கு புரள்வானது வீழ்ச்சியடைந்திருந்ததுடன், கடந்த 5 வாரங்களில் ஈட்டப்பட்ட ஆகக்குறைந்த புரள்வு வீழ்ச்சியாக இது பதிவாகியிருந்தது.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பீசி பார்மா, நேஷன் லங்கா (உரிமை பங்குகள்), பேருவெல வோல்கின், சிலோன் லெதர் (உரிமை பங்குகள்) மற்றும் புளு டயமண்ட் (சாதாரண பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஹியுஜே, சிங்கபுத்ர ஃபினான்ஸ், சிடிபி (சாதாரண பங்குகள்), கெல் பினான்ஸ் மற்றும் ஈபி கிறீசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று சர்வதேச சந்தையில் 52,350.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 47,985 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரமும் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1391.25 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்

கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 130.94 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 206.80 ஆக காணப்பட்டிருந்தது.
"அரசியல் நகர்வுகளால் பங்குச்சந்தை நடவடிக்கைகள் சற்று முன்னேற்றம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty