வட பகுதியில் 11 வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் நாளை திறப்பு
03-07-2012 03:36 PM
Comments - 0       Views - 198
(எஸ்.கே.பிரசாத்)

இலங்கை வங்கியின் 73ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வட பகுதியில் 11 வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் நாளை புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது என இலங்கை வங்கியின் வட பிராந்திய பிரதி பொது முகாமையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

வட பகுதயில் இவ்வாறான சேவை நிலையங்கள் திறக்கப்படுவதால் முப்பது வருட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதராம் கட்டி எழுப்பப்படுவதுடன் வட பகுதி அபிவருத்தியில் தன்னிறைவை காண  கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மருதங்கேணி, மந்திகை, சாவல்கட்டு, ஓமந்தை, யாழ் பல்கலைக்கழகம், கல்வியங்காடு, கிளிநொச்சி கச்சேரி, கரணவாய் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலேயே இந்த வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக  இலங்கை வங்கியின் தலைவர் காலாநிதி காமினி விக்கிரமசிங்க கலந்துகொண்டு வாடிக்கையாளர் சேவை நிலையங்களை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"வட பகுதியில் 11 வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் நாளை திறப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty