கண்டி வித்யார்த்த கல்லூரி ரக்பி அணிக்கு யுனிலீவர் - குளோசப் அனுசரணை
12-07-2012 02:22 PM
Comments - 0       Views - 240

யுனிலீவர் நிறுவனத்தின் குளோசப் பற்பசை அனுசரணையை பெற்றுள்ள வித்யார்த்த கல்லூரியின் ரக்பி அணியானது இவ்வாண்டு பாடசாலை மட்ட ரக்பி தர அட்டவணையில் 5ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. கண்டி வித்யார்த்த கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட ரக்பி அணியானது பல இளம் திறமை வாய்ந்த வீரர்களை தம் வசம் கொண்டுள்ளது.

வித்யார்த்த ரக்பி அணியானது கிங்ஸ்வூட், டி.எஸ்.சேனநாயக்க, புனித அந்தோனியார், புனித சூசையப்பர் மற்றும் பரி.தோமாவின் கல்லூரி போன்ற பிரபல பாடசாலைகளை வீழ்த்தி இவ் வெற்றியை அடைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதற்கமைய, மேலும் பாடசாலை மட்ட  போட்டிகளில் வித்யார்த்த ரக்பி அணியானது தம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இவ் அணிக்கு தம் ஆதரவை வழங்கி வரும் யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குளோசப் பற்பசையானது மென்மேலும் இவ் அணியை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

குளோசப் பற்பசையின் வர்த்தக நாம முகாமையாளரான ஜிப்ரி ஜமில் கருத்து தெரிவிக்கையில் 'யுனிலீவர் நிறுவனத்தின் இளைஞர்களை மையப்படுத்திய முதன்மை தயாரிப்பான குளோசப் பற்பசையின் நோக்கம் இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புக்கான களத்தை அமைத்துக் கொடுத்தலும்;, இப் போட்டிக்கு அனுசரணை வழங்குவதன் ஊடாக அவ்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றனவாக அமைந்துள்ளது. குளோசப் பற்பசையானது விளையாட்டு போட்டி ஒன்றுக்கு அனுசரணை வழங்குவது இதுவே முதல் தடவை என்றும், இக் கல்லூரியின் ரக்பி அணிக்கு தொடர்ந்தும் தம் ஆதரவை வழங்குகிறோம்' என தெரிவித்தார்.

வித்யார்த்த கல்லூரியின் டபிள்யு. அல்விஸ் கூறியதாவது, பல வருடமாக தம் ரக்பி அணி தொழில்சார் தகைமையுள்ள ஓர் அணியாக செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த வருடம் பி பிரிவில் போட்டியிட்ட தம் அணியினர் இவ்வாண்டு முதல் ஏ பிரிவில் போட்டியிட தகைமை பெற்றுள்ளதாக தெரிவித்தார். இவ் அணியின் வெற்றிக்கு குளோசப் பற்பசை மூலம் வழங்கப்பட்ட ஆதரவு பெரும் பக்கபலமாக இருந்ததாக அல்விஸ் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
"கண்டி வித்யார்த்த கல்லூரி ரக்பி அணிக்கு யுனிலீவர் - குளோசப் அனுசரணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty