
வியாழக்கிழமை, 24 மே 2012 |
ஜோதிடம்இன்றைய பலன்கள் (27.04.2012)27-04-2012 இன்றைய பலன்கள் (27.04.2012)
இன்றைய பலன்கள் (26.11.2011)26-11-2011
இன்றைய பலன்கள் (26.11.2011) இன்றைய பலன்கள் (07.11.2011)07-11-2011 இன்றைய பலன்கள் (07.11.2011) இன்றைய பலன்கள் (23.08.2011)23-08-2011 இன்றைய பலன்கள் (23.08.2011) இன்றைய பலன் (07.08.2010)07-08-2010 இன்றைய பலன் (07.08.2010)
இன்றைய பலன்கள் (06.08.2010)06-08-2010 இன்றைய பலன்கள் (06.08.2010)
இன்றைய பலன்கள் (09-07-2010)09-07-2010 மேஷம் - மனநிம்மதி ரிஷபம் - திட்டம் மிதுனம் - பழுது கடகம் - அந்தஸ்து சிம்மம் - சிந்தனை கன்னி - பணவரவு துலாம் - தொந்தரவு விருச்சிகம் - காரியசித்தி தனுசு - உற்சாகம் மகரம் - ஆதாயம் கும்பம் - உறுதி மீனம் - சந்திப்பு இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி08-07-2010 இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி மேஷம் - மீட்டல் ரிஷபம் - சண்டை மிதுனம் - செலவு கடகம் - திறமை சிம்மம் - புத்துணர்ச்சி கன்னி - அலைச்சல் துலாம் - நாவடக்கம் விருச்சிகம் - அனுபவம் தனுசு - திட்டம் மகரம் - பொலிவு கும்பம் - பேச்சு மீனம் - வேலை 16-03-10 to 22-03-1017-03-2010 மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-10-2009 முதல் 28-5-2010 வரை கடகத்தில் நீசமாக இருக்கிறார். பொதுவாக ஒரு ராசியில் 45 நாட்கள் அல்லது 50 நாட்கள் இருக்கும் செவ்வாய் சுமார் எட்டு மாத காலம் நீச ராசியில் இருப்பது ஒரு வித்தியாசமான சஞ்சாரம். அதிலும் அவர் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியாகவோ அல்லது மகரத்தில் உச்சமாகவோ இருந்தார் என்றால் ஒரு சிறப்பு. ஆனால் அவர் கடகத்தில் நீச ராசியில் இவ்வளவு காலம் தங்கியிருப்பது எல்லாருக்கும் ஒரு கெடுதலான பலன். குறிப்பாக மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம், கடக ராசி, கடக லக்னம் ஆகியோருக்கு எல்லாம் இந்த எட்டு மாத காலமும் ஒவ்வொரு வகையிலும் பாதிப்புதான். இதற்கிடையே செவ்வாயின் வக்ரமும் குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக ஆகிவிட்டது. செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த சம்பந்தமான நோய், வைத்தியச் செலவுகளும்; சகோதர காரகன் என்பதால் சகோதர வகையில் பாதிப்புகளும் இழப்புகளும் ஏற்பட்டன. பலருக்கு உடல் ஆரோக்கியமும் கெட்டது. இன்னும் இரண்டு மாத காலம் செவ்வாயின் தாக்குதலைச் சந்தித்து தப்பிக்க முருகனை வழிபடுங்கள். ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சமாக இருக்கிறார். அவர் உச்சமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு அஸ்தமனம். அவருக்கு சாரம் கொடுக்கும் புதன் (ரேவதி) நீசம். அதனால் 1, 6-க்குடைய பலனில் (சுக்கிரன் 1, 6-க்குடையவர்) 1-ஆம் இடத்துப் பலனைக் காட்டிலும் 6-ஆம் இடத்துப் பலனே முதன்மையாக நடக்கும். 1-ஆம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி. 6-ஆம் இடம் என்பது நோய், கடன், எதிரி, வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை இவற்றைக் குறிக்கும் இடம். ஒரு கிரகத்திற்கு பாபத் தன்மை வலுவாக இருந்தால் பாப ஆதிபத்தியமே முதலில் வேலை செய்யும். சுபத் தன்மை வலுவாக இருந்தால் சுப ஆதிபத்தியமே வேலை செய்யும். சுக்கிரன் உச்சமாக இருந்தாலும் வீடு கொடுத்தவர், சாரம் கொடுத்தவர் எல்லாம் பலமிழந்த நிலையில் இருப்பதால் சுக்கிரனின் 6-ஆம் இடத்துப் பலன்களையே நீங்கள் சந்திக்க நேரும். மேலும் சுக்கிரனுக்கு சனி பார்வை கிடைப்பதால்- சனியும் வக்ரம் என்பதால்- சனி 5-ல் இருக்கும் காரணத்தால் பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளைச் சந்திக்கலாம். அல்லது மனத்தளவிலே வெளியில் சொல்ல முடியாத வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கலாம். மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீச ராசியில் இருக்கிறார். ராசிக்கு கேந்திரமாக இருப்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்ந்திருப்பதாலும் புதனுக்கு நீசபங்கம் கிடைக்கிறது. ஆனால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கவில்லை. ஒரு நீசபங்கம் பெற்ற கிரகம்- அந்த கிரகத்திற்கு 5, 9 என்ற திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் கிடைத்தால் நீசபங்க ராஜயோகமாகும். நீசகிரகம் பங்கம் அடைவது ஒரு பலன். நீசபங்கம் பெற்ற கிரகம் ராஜயோகத்தைத் தருவது இன்னொரு பலன். ஒரு வேட்பாளர் லட்சக்கணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்றுவிட்டால் நீசம். கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி தோற்ற வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நீசபங்கம். அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் நீசபங்க ராஜயோகம். ஜென்ம ராசியில் கேது நிற்பதாலும் சனி பார்ப்பதாலும் புதன் நீசபங்கம். பெற்றாலும் ராஜயோகப் பலனைச் செய்ய மாட்டார் என்பது கருத்து. ஆனால் 10-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் வேறு வகையில் உங்களுக்கு ஆறுதல் பரிசு போல நன்மைகள் நடக்கலாம். கெடுதல்கள் அணுகாது. கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் ஜென்ம ராசியில் நீசமாக இருக்கிறார். 2010- மே மாதம் வரை அவர் நீசமாகத்தான் இருப்பார். இதன் மத்தியில் சிறிது காலம் குரு மகரத்தில் நீசமாக இருந்து செவ்வாயைப் பார்த்தபோது எதிர்பாராத சில நன்மைகளையும் அனுபவித்து இருக்கலாம். ஆனால் 2009 டிசம்பர் முதல்- குரு கும்பத்தில் வந்த நாள் முதல் குருவும் செவ்வாயும் 6, 8-ஆக இருந்த காரணத்தால் ஏழரைச்சனி விலகியும் கடக ராசிக்காரர்களுக்கு முழுமையான எதிர்பார்த்த நன்மைகளைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் ஆனது. அதிலும் செவ்வாய் வக்ரம், குரு அஸ்தமனம் என்ற நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக பல காரியங்கள் தள்ளிப்போனது. சிலருக்கு வருமானமே இல்லாத குறை; சிலருக்கு ஆயிரக்கணக்கில்- லட்சக்கணக்கில் பணம் புரண்டாளும் வேறு வகையில் எதிர்பார்த்தவை நடக்காமல் ஏமாற்றமான நிலை; சிலருக்கு தொழில் யோகம், தனவரவு இருந்தும் அரசாங்கத் தொல்லை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு. தற்போது குரு அஸ்தமனம் நீங்கியது. (22-3-2010 குரு உதயம்). ஓரளவு தடைகள் விலகும். செயல்களில் வேகம் இருக்கும். சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். அவரோடு 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைகிறார்கள். இவர்களை சனி (6-க்குடையவர்) பார்ப்பது ஒரு கெடுதல். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு (மீன ராசிக்கு) 12-ல் மறைவது இன்னொரு கெடுதல். அதேசமயம் 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது கெடுதலிலும் நல்லது. என்றாலும் ஏழரைச்சனி வக்ரம் என்பதால் வசதி வாய்ப்பு, சௌகர்யங்களுக்குக் குறைவில்லை என்றாலும், நன்றாகப் படிக்கும் பள்ஸ் டூ மாணவன் பரீட்சையில் தெளிவாக எழுதாமல், மெரிட் மார்க் கிடைக்காமல் பார்டர் மார்க்கில் பாஸ் பண்ணிய மாதிரித்தான். மேற்படிப்பு இன்ஜினியரிங் காலேஜிற்கு மெரிட் சீட் கிடைக்காமல் பேமெண்ட் கோட்டாவில் லட்சக்கணக்கில் செலவழித்து சீட் வாங்கிய மாதிரிதான். சனியின் வக்ரம் உக்ர பலம் என்பதால் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரும். வாரக் கடைசியில் மார்ச் 22-ஆம் தேதி குரு அஸ்தமனம் நீங்கி உதயமான பிறகு, சிம்ம ராசியைப் பார்க்கும் குருவினால் எதிர்பாராத முன்னேற்றங்களையும் திருப்பங்களையும் சந்திக்கலாம். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகவும் அமையலாம். கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் மீனத்தில் நீசமாக இருக்கிறார். நீசம் பெற்ற ஒரு கிரகத்திற்கு நீசம் என்பது ஒரு நிலை; நீசபங்கம் என்பது ஒரு நிலை; நீசபங்க ராஜயோகம் என்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையின் பலனையும் ஏற்கெனவே மிதுன ராசிப் பலனில் பார்த்திருக்கிறோம். ஜென்மத்தில் சனி நிற்பதும் மிதுனத்தில் கேது நிற்பதும் புதனுடைய 1-ஆம் பாவம், 10-ஆம் பாவத்திற்கு பலக்குறைவுதான். அதாவது புதன் கிரகத்தின் இரண்டு ஆதிபத்திய பாவத்திலும் பாவ கிரக சம்பந்தம் இருந்தால், அந்த பாவ ஆதிபத்தியம் பாப பலனாக மாறும். அதாவது அசுப பலன். கன்னி ராசிக்கு குரு 6-ல் இருந்து 10-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஓரளவு தொழில் இயக்கம் தடைபடாமல் செயல்பட்டாலும் போட்டி, பொறாமை, வேலையாட்கள் பிரச்சினை, கடன், வட்டி போன்ற 6-ஆம் இடத்து ஆதிக்கமும் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்காது. மேலும் ஜென்மச்சனி வக்ரம் என்பதால் (வக்ரத்தில் உக்ர பலம்) சனியின் வக்ரம் தெளியும் வரை ஏழரைச் சனியின்- ஜென்ம சனியின் பாதிப்பு உங்களைப் பாடாய்ப்படுத்தத்தான் செய்யும். வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்குவதால் ஒரு ஆறுதல் பலன் எதிர்பார்க்கலாம். துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு 10-ல் 2, 7-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் நீசமாக இருக்கிறார். சில நேரங்களில் கடுமையான நீசமாகவும், சில நேரங்களில் நீசபங்கமாகவும் செவ்வாய் செயல்பட்டார். மகரத்தில் குரு நின்று செவ்வாயைப் பார்த்த காலம், நீசனை நீசன் பார்த்ததால் நீசபங்கமாக இருந்தது. பிறகு குரு கும்பத்தில் மாறி செவ்வாயும் குருவும் 6, 8-ஆக இருக்கும் காலம் நீச வேகம் அதிகமாகி உங்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் நீசமடைகிறார். வாழ்க்கையிலும் தொழில் துறையிலும் நித்தியகண்டம், பூரண ஆயுசாக நாள் ஓடுகிறது. ராசிநாதன் சுக்கிரன் உச்ச ராசியில் இருந்தும் 6-ல் மறைவு என்பதால் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, யார் வீட்டுப் பணத்தையோ புரட்டி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். (பணம் அல்லது சரக்கு) ஏதோ ஒன்று உங்கள் ரொட்டேஷன்னுக்குப் பயன்படும். 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தெய்வ நம்பிக்கையாலும் பிரார்த்தனை வழிபாடுகளினாலும் உங்கள் வாழ்நாள் வீண் நாளாக மாறாமல் ஏதோ இயங்குகிறது. குரு 9-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனும் ராசியைப் பார்க்கும் பலனும் அதுதான். விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2009 ஒக்டோபர் முதல் ஆறு மாத காலம் நீச ராசியில் இருக்கிறார். கடகத்தில் இன்னும் இரண்டு மாதம் இருப்பார். செவ்வாய் நீச ராசிக்கு வந்த நாள் முதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளும் கௌரவப் போராட்டங்களும் குடும்பத்தில் குழப்பங்களும் மனைவி, மக்கள் வகையில் சஞ்சலமும் தேக ஆரோக்கியக் குறைவும் ஆபரேஷன் போன்ற மேஜர் வைத்தியச் செலவுகளும் என எல்லாத் துன்பங்களையும் தொடர் கதையாகச் சந்தித்து சந்தித்து நொந்து போய் விட்டீர்கள். செவ்வாய் மிதுனத்தில் இருக்கும் காலத்திலும் சனி, செவ்வாய் பார்வை சம்பந்தம் கிடைத்த காலத்திலும் உங்களுக்கு துன்பச் சுமை தாங்க முடியாத சுமையாக அமைந்தது. மகர குரு செவ்வாயைப் பார்த்த காலத்திலும் அடுத்த இப்போது கும்ப குருவை செவ்வாய் பார்க்கும் காலத்திலும் உள்ளுக்குள் சந்தோஷம், நிம்மதி, மன நிறைவு இல்லை என்றாலும் வெளி உலகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்கு குறைகள் வராமல் காப்பாற்றப்படுகிறது. இந்த வாரக் கடைசியில் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். அதன் பிறகு பொருளாதார நிலையில் நல்ல திருப்பமும் சேமிப்பும் எதிர்பார்க்கலாம். அதுவரை ஆயிரம் வந்தால் இரண்டாயிரம் செலவு வரும். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) தனுசு ராசிநாதன் குரு சனியின் வீட்டில் கும்பத்தில் மறைகிறார். குருவுக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்ம ராசியில் நிற்பதாலும், குருவுக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 8-ல் மறைந்தாலும் 10-ல் நிற்பதாலும் வாழ்க்கை தொழில் அமைப்பில் செயல் பாதிப்பு, தேக்கம் இல்லை. ஏக்கம் இருக்கலாம்; தேக்கம் இருக்காது. மேலும் இந்த வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவதும் வார மத்தியில் குரு பூரட்டாதியில் சுய சாரம் பெறுவதும் ஒரு நல்ல திருப்பமாகும். அதனால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெறும்; முன்னேற்றகரமான திருப்பங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உதயமாகும். உத்தியோகத்துறையில் முன்னேற்றகரமான மாறுதல்களையும் எதிர்பார்க்கலாம். தொழில் துறையில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தினாலும் 7, 9, 11-ஆம் இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எந்தப் பாதகமும் வராது. கேடு கெடுதியும் அணுகாது. குருவின் அஸ்தமனம் முடிந்த பிறகு குருவின் உதயம் அவர் நிற்கும் இடம், பார்க்கும் இடங்களுக்கு அற்புதப் பலன்களை உண்டாக்கித் தரும். மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி பாக்கிய ஸ்தானத்தில் இருந்தாலும் ஜனவரி- 10 முதல் வக்ரமாக இருப்பதால் சில காரியத் தடைகளும் தாமதங்களும் ஏற்படுகிறது. பொதுவாக சனியின் வக்ரம் உக்ர பலம் என்றாலும் அட்டமாதிபதியான சூரியன் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பதால் தாமதத்தை நினைத்து- தடைகளை நினைத்து மன வெறுப்புக்கும் விரக்திக்கும் ஆளாவீர்கள். என்றாலும் சனி நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெறுவதால் நடப்பதும் நடக்க வேண்டியதும் நல்லபடியாக நடக்கும் என்று மனத்தளவில் ஆறுதல் அடைவீர்கள். 2-ஆம் இடத்து குரு வாரக் கடைசியில் அஸ்தமனம் நீங்கி உதயம் ஆவதால் பணக் கஷ்டமும் நீங்கி தாராளமான வரவு- செலவுகளைச் செயல்படுத்தலாம். 4, 11-க்குடைய செவ்வாய் நீசமடைந்து ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும் 5, 10-க்குடைய சுக்கிரன் உச்சபலமாக இருப்பதால் செயலளவில் அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகர்யங்களில் குறைவிற்கு இடமில்லை. என்றாலும் 3-ல் மறைவு என்பதால் நிறைவிற்கும் இடமில்லை. காலமும் நேரமும் துடுப்பில்லாத படகு போல காற்றடிக்கும் பக்கம் பயணம் போகும். கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிக்காரர்களுக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனி பெயர்ச்சியாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் சனி தற்போது வக்ரம் என்பதால் வக்ரத்தில் உக்ர பலம். மனத்தளவிலே திருப்தியும் முன்னேற்றமும் இல்லாமல் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்றுக் கிடக்கும். ஆற்றில் கிடக்கும் கல் வேகமான வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும். ஆனால் கிணற்றில் கிடக்கும் கல் அசைவற்றுக் கிடக்கும். சிலருக்கு சனியின் வக்ரம் இடப் பெயர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் 10-க்குடைய செவ்வாய் 6-ல் நீசமாக இருப்பதால் நினைப்பது ஒன்று, நிகழ்வது ஒன்றாக முடியும். ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும்; ஒன்றும் நினையாமல் இன்னொன்று நிற்கும்; எனையாளும் ஈசன் செயல் என்று ஒரு பாடல் உண்டு. அது உங்களுக்கே பொருத்தமான பாடலாக அமையும். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் திட்டங்களும் அற்புதமாகத் தெரிந்தாலும் அதற்கான முயற்சிகளும் மிகத் தீவிரமாக அமைந்தாலும் எது வருகிறதோ அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று காயாகத் தெரியும் காரியங்கள் அனைத்தும் நாளை பழுத்துக் கனியாகி இருக்கும். மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு ராசிக்கு 12-ல் மறைந்திருக்கிறார். வாரத் தொடக்கத்தில் ராகுவின் சாரத்தில் இருக்கும் குரு அடுத்து பூரட்டாதி 1-ல் சுயசாரம் பெறுகிறார். குரு 10-க்குடையவர். அவரை 9-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபங்கம் பெற்றுப் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. செவ்வாய் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். பூசம் சனியின் நட்சத்திரம். சனி செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். அதனால் செவ்வாய்க்கு நீசபங்கம் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தாலும் அவற்றை எல்லாம் சந்தித்து சமாளிக்கும் வல்லமையும் ஏற்படுகிறது. 6-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். சனி சூரியன் நட்சத்திரத்தில் புதன் வீட்டில் நின்று, மீனத்தில் நிற்கும் சூரியன், புதனையும் பார்க்கிறார். எனவே, செலவுகள் படையெடுத்து வந்து வாசல் கதவைத் தட்டினாலும் வரவுகளும் எதிர்பாராமல் வந்து தாக்குப்பிடித்து காத்து நிற்கும். மலை போல வரும் பிரச்சினைகள் எல்லாம் பனி போல விலகிவிடும். புதனும் சுக்கிரனும் ஜென்ம ராசியில் நீசம். உச்சம் என்றாலும் புதனுக்கு நீசபங்கம் என்பதால் கௌரவம் பாதிக்காது. செயல்கள் பாதிக்காது. 4-ல் கேது, 10-ல் ராகு கேதுவுக்கு சனியின் பார்வை பிரச்சினைகளை உருவாக்கினாலும் குருவும் கேதுவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷ ராசிநாதன் செவ்வாய் சனியின் சாரத்தில் வக்ரம் பெற்று நீச ராசியில் நீசபங்கமாகவும் இருப்பதால் உங்களுடைய செயலில் அல்லது முயற்சியில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் தோல்விக்கு இடமில்லை. சில காரியங்களில் லேட்டானாலும் லேட்டஸ்டாக சாதித்து விடலாம். செவ்வாய் 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். செவ்வாய் நின்ற இடம் 4-ஆம் இடம். இதில் செவ்வாய் ராசியாதிபதி என்பதால், இந்த இடங்களில் சில அசுப பலன்களைக் கொடுத்து பிறகு சுபப் பலன்களாக மாற்றிவிடும். செவ்வாய் நீசம், வக்ரம் என்பதால் ஆரம்பத்தில் அசுப பலன்களைச் சந்தித்து பிறகு நீசபங்கம் என்பதாலும் வக்ரத்தில் உக்ர பலம் என்பதாலும் சுபப் பலன்களாக மாற்றிவிடும். அதை உதாரணத்தோடு சொல்லுவதென்றால், அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வருடக்கணக்கில் குடியிருக்கிறவர்களைக் காலி செய்வது அசுப பலன். அவர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியதும் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அரசு வீடு கட்டித் தருவது சுபப் பலன். இப்படி பூமி, வீடு, வாகனம், கல்வி, தாய், சுகம் ஆகிய 4-ஆம் பாவகப் பலனில் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளைச் சந்தித்து பிறகு நற்பலன்களாக மாறும். அதேபோல 7- திருமணத்தடை விலகும். கணவன்- மனைவிக்குள் அடிப்படை கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, பிறகு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் நிலை ஏற்படும். தொழில் துறையிலும் எதிர்பாராத சங்கடங்களைச் சந்தித்து, பிறகு அதை நிவர்த்தி செய்து லாபமும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். 11-ஆம் இடம் மூத்த சகோதரம். அதற்கு சகோதர காரகன் செவ்வாய் 6-ல் இருப்பதால் மூத்த உடன்பிறப்புக்கள் வகையில் சில தர்ம சங்கடங்களைச் சந்தித்து நிவர்த்தியாகும். ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 10-ல் இருந்து, பிறகு 3-ஆம் தேதி முதல் 11-ல் மீனத்தில் உச்சம் அடைகிறார். எனவே செல்வாக்கு, கீர்த்தி, திறமை, செயல்பாடு ஆகிய 1-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட நற்பலன்களை அடையலாம். பாராட்டும் பரிசுகளும் பெறலாம். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற மாதிரி பெருமைக்கு குறைவு ஏற்படாது. அதேசமயம் சுக்கிரன் 6-க்கும் உடையவர். அவர் உச்சம் பெறுவதால் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளும் உச்சமாகவே அமையும். ஆனாலும் அவற்றினால் உங்களுக்கு பாதிப்போ தோல்வியோ வராத வண்ணம், 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியும், 11-க்குடைய குரு 10-ல் இருப்பதாலும் வெற்றிக்கு இடமுண்டு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பது போல எதிரிகளை உதிரிகளாக்கி விட்டு முன்னேற்றப் பாதையில் செயல்பட்டு வெற்றி பெறலாம்; சாதித்துக் காட்டலாம். சுக்கிரன் 11-ஆம் இடத்துக்குரிய குருவின் சாரத்திலும் 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியின் சாரத்திலும் சஞ்சரிப்பதால் லாபமும் வெற்றியும் முன்னேற்றமும் தடையில்லாமல் வந்து சேரும். 3-ஆம் இடம் தைரிய ஸ்தானம். அங்கு செவ்வாய் நீசபங்கமாகவும் வக்ரமாகவும் இருப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் விளங்கும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் வெளியில் கூற முடியாதபடி சில சங்கட உணர்வுகளைச் சந்திக்க வைத்தாலும், ராசிநாதன் உச்ச பலத்தால் அவற்றை சாமர்த்தியமாகக் கையாண்டு சமாளித்துவிடலாம். 2-ல் கேது, 8-ல் ராகு என்பதால் பங்குச் சந்தை, ஸ்பெகுலேஷன் அல்லது எதிர்பாராத தனப்ராப்திகளும் உண்டாகும். மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் வார தொடக்கத்தில் 9-ல் இருக்கிறார். ராகு சாரத்தில் நிற்கும் புதன் 7, 10-க்குடைய குருவின் சாரத்தில் மாறுவார். வாரக் கடைசியில் மீனத்தில் நீசம் அடைவார். என்றாலும் ராசிக்கு 10-ல் கேந்திரம் என்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்வதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். வேலை இல்லாமல் வீண்பொழுதாக நாளைக் கழித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். அர்த்தாஷ்டமச் சனி (4-ஆம் இடம்) பலனாக கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களுக்கு ஈடு செய்யும் வகையில் புதிய தொழில் அமைப்புகளை உருவாக்கலாம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் குடும்பத்தினரோ அல்லது உடனிருப்பவர்களோ உங்கள் திட்டங்களின் பெருமைகளை உணராமல் உங்கள் வேகத்தைத் தடைப்படுத்தலாம் அல்லது எதிர்மறையாகப் பேசலாம். அவற்றையெல்லாம் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் மனம் ஆணையிடும் வகையில் நம்பிக்கையோடு செயல்படுவதற்கு 9-ல் நின்று பார்க்கும் குருவும் 9-க்குடைய சனியின் பார்வையும் துணை புரியும். அதைவிட சிறப்பு- 10-க்குடைய குரு 9-ல் நிற்க, 9-க்குடைய சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே அது உங்களை வழிநடத்தும். இராவணனின் அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டாலும், கற்புக்கு எந்தக் களங்கமும் வராத வகையில் காப்பாற்றப்பட்டது போல தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றும். கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிக்கு ஏழரைச்சனி விலகியும் இன்னும் சரியான முறையில் வருமானம், தொழில் அமையவில்லையே என்ற கவலை சிலருக்கு. வருமானம், தொழில் எல்லாம் முறையாக இருந்தும் உயர்வுக்கு வழியில்லாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போல அசைவற்று அப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம் சிலருக்கு. பதவி கிடைத்தாலும் அல்லது பதவி உயர்வு பெற்றாலும் விரும்பிய இலாகா அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சி இல்லையே என்ற விரக்தி சிலருக்கு. இதற்கு இரண்டு காரணங்கள். 10-க்குடைய செவ்வாய் வக்ரம், நீசம் என்பது ஒரு காரணம். பாக்கியாதிபதி குரு 8-ல் மறைவு. அஸ்தமனம் என்பது இன்னொரு காரணம். மார்ச் 13-ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். மார்ச் 22-ல் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவார். குருப்பெயர்ச்சி மே 2-ல் என்றாலும் குரு உதயமானதற்குப் பிறகு ஓரளவு குருவால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அதன்பிறகு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் செயல்படும். ஏழரையாண்டு சனியின் தொல்லைகளைச் சந்தித்துப் போராடியவர்களுக்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க முடியாதா! குரு 8-ல் மறைந்திருந்தாலும் 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால், செலவு செய்வதற்காகவே வரவும் வந்து சேரும். 4-ஆம் இடத்துச் சுக்கிரன் லாபாதிபதியாகி மார்ச் 3-ல் 9-ல் உச்சம் பெறும்போதே தடைகள் விலகும். வழிகள் பிறக்கும். சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சாரம். சூரியனுக்கு ராகு பகை கிரகம். ராகு 5-ல் நிற்கிறார். அதனால் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் வெற்றி வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப் போகிறது. பரிசுச் சீட்டில் முதல் பரிசிற்கு ஐந்து நம்பர் உங்கள் கையிலிருக்கும் சீட்டை ஒட்டியே வந்து, ஆறாவது நம்பர் கடைசி நம்பர் வேறு நம்பர் ஆகிவிட்டால் எப்படி ஏமாற்றம் ஆகிறதோ அப்படி உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் ஏமாற்றம் ஆகிறது. அதற்கு செவ்வாயும் சனியும் ஒரு காரணம்- செவ்வாய் 12-லும் சனி 2-லும் இருப்பதும்தான். என்றாலும் 5-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதோடு ராசிநாதன் சூரியனோடு சேர்ந்திருப்பதால் எல்லா சிக்கல்களையும் கடந்து சமாளிக்கலாம். ஆனால் மனம் மட்டும் ஏதாவது ஒரு வகையில் நிம்மதி இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் 5-ல் நிற்கும் ராகுதான். அவரை சாந்தப்படுத்த வடக்குப் பார்த்த காளியை வணங்கலாம். கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கிறார். ஜென்ம ராசியில் சனி நிற்கிறார். அதனால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. குரு 6-ல் அஸ்தமனம்- மறைவு. ஆகவே தொழில் இயங்கினாலும் சம்பாத்தியம் அவ்வப்போது இருந்தாலும் எல்லாவற்றிலும் எதிர்பார்க்கும் நிறைவு இல்லாமல் தவிப்பீர்கள். விரக்தி, அலைச்சல், டென்ஷன் அதிகமாகும். கடனை வாங்கித் தொழிலை நடத்தி, வெளியில் கடனைக் கொடுத்து குறித்த காலத்தில் பணம் வசூல் ஆகாமல், வாங்கிய பணத்தை நாணயத்தைக் காப்பாற்ற வட்டிக்கு வாங்கித் தர வேண்டி இருக்கும். ஏற்கெனவே மீள முடியாத கடன் என்னும் கடல் ஆழத்தில் தவிப்பவர்களுக்கு மேலும் புதுக்கடன் எனும் அலை வந்து மோத தப்பிக்கத் திணறுவீர்கள். இந்தத் துன்பம் எல்லாம் நிரந்தரமல்ல- தற்காலிகமானவைதான் என்றாலும், 4-ஆம் இடத்து ராகுவும் 10-ஆம் இடத்துக் கேதுவும் உங்கள் சுகத்தையும் கெடுத்து தொழில்துறையில் பயத்தையும் கொடுக்கும். மார்ச் 3-ல் 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம் பெறுவார். மார்ச் 8-ல் அவரோடு புதனும் போய்ச் சேருவார். அதன்பிறகு சில நல்ல திருப்பங்கள் உண்டாகும். குருவின் மறைவு தோஷம் விலக இறைவழிபாடும் ஹோமங்களும் செய்து கொள்வது அவசியம். துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம். சனி ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆனாலும் சனியின் பாதிப்பைவிட செவ்வாய் கடகத்தில் நீசமான பிறகுதான் தொழில் கவலையும் தேவையில்லாத இடப்பெயர்ச்சியும் காரண காரியமில்லாத கற்பனை பயமும் உங்களைச் சூழ்கிறது. நேர்மையான அதிகாரிகள் சிலர்மீது, அவரால் நன்மையும் பயனும் அடைந்தவர்களே மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி சிக்கலை உண்டு பண்ணுவார்கள். அதன் காரணமாக மூன்று மாதம், ஆறு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்களையும் சந்திப்பார்கள். இவையெல்லாம் 10-ஆம் இடத்து செவ்வாயின் பலனாகும். அதற்காகக் கவலைப்படாதீர்கள். ஆட்டு மந்தையில் ஒரு கருப்பு ஆடு உங்களை வெறுப்பேற்றுகிறது. அது எந்த ஆடு என்று அடையாளம் தெரியவில்லை. மார்ச் 13-ல் செவ்வாய் வக்ர நிவர்த்தி ஆனதும் மறைமுகமாக முதுகில் குத்தியவரை அடையாளம் காணலாம். ஒரு சிலருக்கு மார்ச்சில் ஒப்பந்த வேலை முடிவு பெற்ற பிறகு ஏப்ரலில் என்ன செய்வது என்ற கவலையும் குழப்பமும் உருவாகலாம். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். தொடர்ந்து பணியாற்றும் யோகம் ஏற்படலாம். சனி 12-ல் இருக்கும் வரை பெரும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம், நீசபங்கம், வக்ரம். விருச்சிக ராசிக்கு சனியின் பார்வை. 2-ல் ராகு, 8-ல் கேது. இவை எல்லாம் உங்களுடைய சந்தோஷத்தை மூடி கதவடைக்கிறது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தாராளமான பணப்புழக்கம் இருந்தாலும் சேமிப்புக்கு இடமில்லாத வகையில் பண விரயம் ஏற்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூல் ஆகாமல் டென்ஷன் ஆகும். கொடுத்த பணத்தைக் கேட்டால் பகை உருவாகும்; வருத்தம் உருவாகும். அதற்காகக் கொடுத்த பணத்தைக் கேட்காமலும் இருக்க முடியாது. கேட்காத பணமும் பார்க்காத தொழிலும் கெட்டுப் போகும் என்பது பழமொழி. வெளியில் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் வீட்டுக்குள் கௌரவ பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டும். இவையெல்லாம் மார்ச் 13 வரை- செவ்வாயின் வக்ர காலம் முடியும் வரை சமாளிக்க வேண்டும். அதன்பிறகு இந்தச் சூழ்நிலை மாறும். செவ்வாய் நீசம் தெளிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும் வக்ர நிவர்த்திக்குப் பிறகு உங்களுக்கு அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். இக்காலம் முடியும் வரை குடும்பத்திலும் வெளியிலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மௌனம் கலக நாஸ்தி. தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். அதற்குரிய பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய தனுசு ராசிநாதன் குரு அஸ்தமனமாக இருக்கிறார். (பிப்ரவரி 20 முதல் மார்ச் 22 வரை.) அவர் 1, 4-க்குடையவர். அவருக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்மத்தில் இருப்பதால், அடிப்படை கௌரவ பாதிப்புகளோ சௌகரியக் குறைவுகளோ ஏற்படாது என்றாலும் மன சலனமும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் சிலருக்கு இருக்கலாம். குரு 4-க்குடையவர் என்பதால் சிலருக்கு தேக ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையும், சிலருக்கு சௌகரியமான வீடு அமையவில்லையே என்ற கவலையும், சிலருக்கு கட்டிட வேலையைப் பூர்த்தி பண்ண முடியவில்லையே என்ற கவலையும் ஏற்படும். வாகனங்கள் வைத்திருப்போருக்கு தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். அல்லது வாகனப் பரிவர்த்தனை ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் முன்னேற்றத்திற்குரிய அமைப்புகளும் தாமதப்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்கள். குரு பலம் பெறும்போது எல்லாம் நீங்கள் நினைத்ததற்கு மேல் வளமாக நலமாக நடந்தேறும். குரு பார்வை 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் ஆனந்தமும் அமைதியும் நிலவும். தெய்வ வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நிறைவேறும். பணப் பற்றாக்குறை இல்லாமல் வரவு- செலவு ஓடியடையும். மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பதால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் அதிகமாக இருக்கும். சனிக்கு வீடு கொடுத்த புதன் ஜென்ம ராசிக்கு 2-ல் பரிவர்த்தனையாக இருப்பதால் சனி- புதன் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அதனால் தாராளமான வரவு- செலவுகளும் தடையில்லாத பணப் புழக்கமும் இருக்கும். 7-ல் செவ்வாய் நீசமாக இருந்தாலும் களஸ்திர காரகன் சுக்கிரன் 3-ஆம் தேதி மீனத்தில் உச்சம் பெறுவதால் கணவன்- மனைவிக்குள் பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவும். முரண்பட்ட கருத்துகள் மாறி அனுசரிப்புத் தன்மை உண்டாகும். சிலரின் மனைவிக்குத் தொழில் யோகமும் உத்தியோக வாய்ப்பும் உருவாகலாம். உங்களுக்கும் தொழில் வளமும் மேன்மையும் புதிய திட்டங்களும் உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் அதிகமாகும். எவ்வளவு விசுவாசமாகவும் உண்மையாகவும் பாடுபட்டாலும் பாராட்டு எதிர்பார்க்க முடியாது. பாராட்டும் பரிசும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; பழி சொல்லாமல் இருந்தால் போதும் என்று ஆறுதல் அடையுங்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இல்லாவிட்டால் சகோதர வகையில் ஒரு சிலர் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; நீரடித்து நீர் விலகாது என்ற பாலிசியைக் கடைபிடிக்கவும். கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைந்திருக்கிறார். சனிக்கு சாரம் கொடுத்த சூரியனும் வீடு கொடுத்த புதனும் ஜென்மத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் 6, 8-ஆக இருப்பதால், உங்களுக்கு யாரும் விரோதிகள் இல்லை என்றாலும் உங்களை மற்றவர்கள் விரோதக் கண்ணோட்டத்தோடே பார்ப்பார்கள். எப்போதும் உண்மையாகவும் எதார்த்தமாகவும் நீங்கள் நடந்து கொண்டாலும் மற்றவர்களுக்குக் குற்றமாகவே தெரியும். உள்ளதை சொன்னால் பொல்லாப்பு வரத்தானே செய்யும். இது கும்ப ராசிக்கே பொதுவான விதி என்றாலும், இப்போது அட்டமத்துச்சனி காலத்தில் அது முக்கியத்துவம் ஆகிவிடும்; உங்களை அதிகம் கவலைப்பட வைக்கும். செவ்வாய் சகோதர காரகன் 6-ல் மறைந்த வக்ரமாகி நீசப்படுவதால், உடன் பிறந்தவர்கள் வகையில் உங்கள் பரந்த மனப்பான்மையைப் புரிந்துகொள்ளாமல் உங்களை நோகடிப்பார்கள். மார்ச் 3-ஆம் தேதி சுக்கிரன் 2-ல் உச்சமானதும், ராசிநாதன் சனியின் பார்வையைப் பெறும் காலம் பொருளாதார நெருக்கடி நிலை மாறும். தாராளமான வரவு- செலவும் பணப் புழக்கமும் உண்டாகும். புதியவர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் எதிர்பார்க்கலாம். மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு 12-ல் மறைந்திருப்பது ஒரு வகையில் பலக்குறைவு தான். எடுத்த வேலைகளைத் தொடுத்து முடிக்கவும் வேகமாக விரைந்து நிறைவேற்றவும் விரும்பலாம். ஆனால் நேரம் காலம் ஒத்துழைக்காமல் தடை, தாமதம் ஏற்படும். 2, 9-க்குடைய செவ்வாய் நீச ராசியில் வக்ரப்பட, சனி ஜென்ம ராசியைப் பார்க்க, ராசிநாதன் குருவும் 12-ல் மறைந்து சனி- குரு, செவ்வாய்- குரு என 6, 8-ஆக அமர்ந்திருப்பதால் அன்புத் தொல்லைகள் அதிகமாகும். வீண் விமர்சனமும் காரியத்தடைகளும் தேவையற்ற விரயங்களும் திடீர் பயணங்களும் உண்டாகி உங்களுக்கு சந்தோஷக் குறைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளிப் போவது மன வருத்தத்தை உண்டாக்கும். 4-ஆம் இடத்துக் கேதுவும் அவரைப் பார்க்கும் சனியும் ஆரோக்கியக் குறைவையும் அதனால் மனச் சங்கடத்தையும் உருவாக்கும். என்றாலும் 2-ல் சுக்கிரன் 3-ஆம் தேதி உச்சம் பெறும்போது பொருளாதார நிறைவும் தேவையான அளவு காரியங்கள் நிறைவேறப் பணப் புழக்கமும் கிடைப்பதால் மற்ற கவலைகளை மறந்து ஆறுதல் அடையலாம். 7-ல் சனி இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த புதனும் சாரம் கொடுத்த சூரியனும் கும்பத்தில் பரிவர்த்தனை பெறுவதால், எந்த பாதிப்பும் இல்லாமல் மனைவி, குடும்பம், மக்கள் வகையில் நற்பலன்கள் உண்டாகும்; துர்பலன்களுக்கு இடமில்லை. JPAGE_CURRENT_OF_TOTAL |
|---|
Group Sites: Daily Mirror | Sunday times | Lankadeepa | Financial Times | epaper | HI Mag | Lanka Women | Hit Ad | WNL | Tamil Mirror | Mirror Sports |
Services :Home delivery | Webmaster| Web Ads | Editorial | Help Desk|
Copyright © 2012 Wijeya Newspapers Ltd.