மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டள்ளது.
மொஹமட் நஷீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் தூரப்பிரதேசங்களிலுள்ள சில பொலிஸ் நிலையங்களையும் கைபற்றியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மொஹமட் நஷீட்டை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 தீவுகளை மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மொஹமட் நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி நேற்று இலங்கைக்குக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
RSS feed for comments to this post