innerback
innerback

கராச்சி ஆடைத்தொழிற்சாலை தீ விபத்தில் 246 பேர் பலி
12-09-2012 12:01 PM
Comments - 0       Views - 499
பாகிஸ்தானின் இரண்டு பிரதான நகரங்களிலுள்ள தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் 271  பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் பாகிஸ்தான் நகரான கராச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 246 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் சகீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு பாகிஸ்தான் நகரான லாகூரில் பாதணி தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கராச்சியில், மீட்பு பணிகளில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருவதாகவும் காயமடைந்தவர்களுக்குரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அம்ஜாட் பாரூகி தெரிவித்துள்ளார்.

இன்னமும் பலர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக தீயணைப்பு படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
"கராச்சி ஆடைத்தொழிற்சாலை தீ விபத்தில் 246 பேர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty