வியாழக்கிழமை, 24 மே 2012

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயம்

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயம் வழங்கப்படுகிறது.
விவசாயச் செய்கையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மானிய அடிப்படையில் இந்த விதை வெங்காயத்தை உணவு மற்றும் விவசாய தாபனம் வழங்கிவருகிறது.

தற்போது இந்த அமைப்பு பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் கிராம அலுவலர்களுக்கூடாக இந்த மானியத்தை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

ஏறக்குறைய 300க்கு மேற்பட்ட விவசாயிகள் இதன்மூலம் பயன்பெறுவர் என்று பிரதேசக் கமக்காரர் அமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர, இந்த அமைப்பு விவசாய உபகரணங்கள் உட்பட மேலும் பல உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

Views: 243

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.