வியாழக்கிழமை, 24 மே 2012

நித்தியானந்த குருக்கள் கொலை வழக்கு: சந்தேக நபர் பிணையில் விடுதலை

 

(கவிசுகி)

யாழ். சங்கானையில் கடந்த 11.12.2010 ஆம் திகதி நித்தியானந்த குருக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து அவரிடமிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 2இவது சந்தேக நபர் பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது

நிந்தியானந்தக் குருக்கள் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கடந்த 2011 காலப்பகுதியில் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் 2ஆவது சந்தேக நபரான சுப்பரமணியம் சிவரூபன் தொடர்பாக அவரது சட்டத்தணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்திருந்தார்.

இதையடுத்து,  2ஆவது சந்தேக நபருக்கு 1 இலட்சம் காசுப் பிணையும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேவேளை, சந்தேக நபர் மாதத்தில் இறுதி வாரத்தில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

அரசாங்கத்தின் சாரிபில் சட்டத்தரணி வி. திருக்குமரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.
 

 

Views: 1068

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.