மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைத்த நபருக்கு ஒரு மாத சிறை தண்டனை
19-03-2012 06:19 PM
Comments - 0       Views - 371

 

(கவிசுகி)
யாழ்.நகரப் பகுதியில் மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறாக செயற்பட்ட நபரை யாழ்.பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேற்படி நபர் பலதடவைகள் இச்சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்படி நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் அவருக்கு ஒருமாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தீரப்பளித்தார்.

"மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைத்த நபருக்கு ஒரு மாத சிறை தண்டனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty