innerback
innerback

வாகன விபத்தில் நெல்லியடி கிராம சேவையாளர் பலி; மற்றொருவர் காயம்
21-05-2012 01:06 PM
Comments - 0       Views - 376
(எஸ்.கே.பிரசாத்)

யாழ். உடுப்பிட்டி, குஞ்சர்கடை சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் நெல்லியடி கிராம சேவையாளரான நா.ஸ்ரீஸ்குமார் உயிரிழந்துள்ளார்.

குறித்தி பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த ஒருவர் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
"வாகன விபத்தில் நெல்லியடி கிராம சேவையாளர் பலி; மற்றொருவர் காயம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty