innerback
innerback

வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்
13-07-2012 01:29 PM
Comments - 0       Views - 220
                                                                         (ஜெ.டானியல்)
யாழ்.சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழழை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சாய் வீதி, சாவகச்சேரியைச் சேந்த அ.யூட்ரவீந்திரன் (வயது 13) என்ற  சிறுவனே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவன் டிப்போக் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி சிறுவன் தனது உறவினருடன் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வேளை ஏ9 வீதி வழியால் வந்த வாகனம் ஒன்று இருவரையும் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty