தனியார் காணிகளில் இயங்கும் பொலிஸ் நிலையங்களை அரச காணிகளுக்கு மாற்ற நடவடிக்கை
13-07-2012 03:35 PM
Comments - 0       Views - 253
                                                                    (எஸ்.கே.பிரசாத்)
யாழ். மாவட்டத்தில் தனியார் காணிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களை அரச காணிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

மானிப்பாய், சுன்னாகம், இளவாலை ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான காணிகளிலேயே பொலிஸ் சேவை இடம்பெற்று வருகின்றது. அதிலும் இளவாலை பகுதிகளில் 12 தனியாருக்குச் சொந்தமான வீடுகளை உள்ளடக்கிய வகையில் பொலிஸ் நிலையம் செயற்பட்டு வருகின்றன.

காணி உரிமையாளர்களினால் தொடர்ச்சியாக தங்களின் இடங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கைகள் விடுத்து வரும் நிலையில் அரச காணிகளுள் பொலிஸ் நிலையங்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கான அரச காணி தொடர்பாக பிரதேச செயலாளர்களினால் முன்மொழியப்பட்ட காணிகள் தொடர்பாக கடந்த 10 ஆம் திகதி யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேராவுடன் சென்று பார்வையிட்டதாகவும் இது தொடர்பான அறிக்கை பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முடிவு வந்தவுடன் பொலிஸ் நிலையங்கள் அரச காணிகளுக்கு மாற்றப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
"தனியார் காணிகளில் இயங்கும் பொலிஸ் நிலையங்களை அரச காணிகளுக்கு மாற்ற நடவடிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty