வியாழக்கிழமை, 24 மே 2012

இந்தியாவிலிருந்து வந்த 111 பேருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழ்

 

(எஸ்.ஜெனி)

இந்தியாவில் இருந்து மீண்டும் மன்னாருக்கு வந்த 111 பேருக்கான பிரஜாவுரிமைச் சான்றிதழ்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழக இயக்குநர் எஸ்.சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா சென்று தங்கியிருந்தவர்களுக்கு இந்தியாவில்  பிறந்த பிள்ளைகள்  தாயகம் திரும்பியபோதிலும், நீண்டகாலமாக பிரஜாவுரிமைச் சன்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை  எதிர்நோக்கி வந்தனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் இலவசமாக இவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இவர்களுக்கான பிரஜாவுரிமைச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Views: 534

Comments   

 
0#riswan2012-02-06 23:55
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவகளின் நிலை என்ன ?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.