வியாழக்கிழமை, 24 மே 2012

மீள்குடியேற்ற நிகழ்விற்கு அழைப்பு விடுத்தும் சம்பந்தன் வரவில்லை: மீள்குடியேற்ற அமைச்சர்

 

(றிப்தி அலி)

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை என மீள்குடியேற்ற அமைச்சர்  குணரட்ன வீரகோன் தெரிவித்தார்.

யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களை புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் வீரகோன் குறிப்பிட்டார்.

"இந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட கால பகுதியில் ஒரு தடவையேனும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சென்று பார்வையிடவில்லை.

அத்துடன் குறித்த மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஒரு டிஸ்பிரின் மருந்து வில்லையினையும் வழங்கவில்லை. அனைத்து உதவிகளை பாதுகாப்பு படையினரே வழங்கினர்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Views: 774

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.