(நவரத்தினம்)
2012ஆம் ஆண்டு குடிசனத்தொகை மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வவுனியா பிரதேச செயலகத்தில் தொகை மதிப்பு உத்தியோகஸ்தர் ஏ. ஜே. நேசராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
வவுனியாவில் இடம்பெற்று வரும் பயிற்சி நெறிகள் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளாக தொகை மதிப்பில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு இடம்பெற்று வருவதுடன் எவ்வாறு படிவங்களை நிரப்புவது மற்றும் அவற்றை தொகுப்பது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

