வவுனியா புதிய மாவட்ட செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு
18-05-2012 11:02 AM
Comments - 0       Views - 543

(நவரத்தினம், பிரியந்த ஹேவகே)


வவுனியா மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராக எம். கே. பந்துல கரிச்சந்திர இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவரை வவனியா மாவட்ட மேலதிக செயலாளர் என். திருஞானசம்பந்தனரால் வரவேற்கப்பட்டார்.

இதனையடுத்து, மதத்தலைவர்களின் ஆசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமையை தொடர்ந்து கடமைகளை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

எம். கே. பந்துல கரிச்சந்திர இதற்கு முன்னர் காலி மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது." வவுனியா புதிய மாவட்ட செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty