சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
13-07-2012 12:16 PM
Comments - 0       Views - 321
                                                        (எஸ்.ஜெனி)
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஞானோதயத்தில் காலை நடைபெறவுள்ளது.

மன்னார் சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கு தொடர்பாக சர்வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் கருத்து தெரிவிக்கையில்,

'மன்னாரில் உள்ள சர்வமதத் தலைவர்கள், சிறுவர் உரிமைகளோடு தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள், கல்வித்துறை, சட்டத்துறை, சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள், பெற்றோர் எனப் பல்வேறு தரப்பினர் இக்கருத்தரங்கில் பங்கெடுக்கின்றனர்.

நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் (நெய்பர்) மற்றும் மன்னார் ஆயர் ஆகியோர் எமது இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓரு பாரிய சமூக மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகும்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், பொலிஸ் நிலையங்களுக்கு, நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படும் சம்பவங்கள் பத்து வீதமானவையே. தொண்ணூறு வீதமான சம்பவங்கள் வெளிவருவதில்லை.

பல்வேறு காரணங்களுக்காக அவை மூடி மறைக்கப்படுகின்றன.

நமது எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான சிறுவரை மிகமோசமாக, மிக வேகமாகப் பாதித்துவரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட மட்டத்தில் பரந்த அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்னும் கொடிய தீமையை, ஆபத்தை இல்லாதொழிப்பதற்கு சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்' என்றார்.

"சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty