(ஜிப்ரான்)
மட்டக்களப்பு— வாழைச்சேனை பிரதான வீதியில் பிள்ளையாரடியில் இன்று மாலை இடம் பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் கைக்குழந்தை உட்பட மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனையிலிருந்து நிந்தவூரை நோக்கி வந்த கார் வீதியை விட்டுவலகி அருகிலிருந்த பனைமரங்களில் மோதியுள்ளது. இதன்போது வீதி ஓரத்தில் இருந்த ஒருவர் பலியானார்.
குறித்த காரில் பயணம் செய்த கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோருடன் வீதியிலிருந்த மற்றொரு வியாபாரியும் காயமடைந்தனர். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
.jpg)

