வெள்ளிக்கிழமை, 25 மே 2012

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்த்தர் அசாம் பொலிஸில் சரண்

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் வைத்து இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக நாடகமாடியதாக தெரிவிக்கப்படும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்த்தர் ஏ.சி.எம்.அசாம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை சரணடைந்துள்ளார்.

சுட்டதரணியுடன் சரணடைந்த இவரை மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்ட பின்னர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது அசாமை  சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை மார்ச் 5ஆம் திகதி நடைபெறும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 10.15 மணியளவில் மேற்படி அசாமை மட்டக்களப்பு நகரில் இனந்தெரியாதோரினால்; கடத்தப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த 29ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி,  அசாம் கடத்தப்படவில்லை, இவர் கடத்தப்பட்டதாக தம்மிடம் பொய் கூறி நாடகமாடியுள்ளார் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அறிவித்தனர்.

இதையடுத்து தலைமைறைவாகியிருந்த அசாமை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையிலேயே இவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Views: 669

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.