கிழக்குப் பல்கலை விரிவுரையாளர்களை அறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்
21-03-2012 04:26 PM
Comments - 1       Views - 983

(எம்.சுக்ரி, எஸ்.வதனகுமார், ஜவீந்திரா)

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரை மாணவர்கள் அறையொன்றில் வைத்து பூட்டிய சம்பவம் இன்று இடம்பெற்றது.

இம்மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்ட அதேவேளை, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை கதவை திறக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலைமையினை தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளடன் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  பல மணித்தியாலங்களின் பின் விரிவுரையாளர்கள், நிர்வாகத்தினர் அவ்வறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

தற்போது பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் கற்கை நிலையத்தின் நிர்வாகத்தினருக்கு இடையில் கூட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

இன்று புதன்கிழமை காலை முதல் மேற்படி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிலையத்தில் காணப்படும் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்துமே வகுப்பு பகிஷ்கரிப்பு  நடவடிக்கையில் ஈடுபடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

"கிழக்குப் பல்கலை விரிவுரையாளர்களை அறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
R.F.Arooz 22-03-2012 03:19 AM
எது எப்படித்தான் ஆனாலும் இன்று இளைஞர் சமுதாயம் தலைகீழாய் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பது மட்டும் வெள்ளிடைமலை. எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். இங்கோ பல்கலைக் கழகத்தைச் சிறைச்சாலையாக்கி விரிவுரையாளர்களைக் கைதிகளாக்கு எம் நிலைமை தலைதூக்கியுள்ளது. இப்படியான இளைஞர் சமுதாயத்தால் எமது நாடு எந்தவொரு எழுச்சியையும் அடையப்போவதில்லை. இப்போதெல்லாம் உரிமை கோரல் என்ற பேரில் அரங்கேறிக்கொண்டிருப்பவைகள் பெரும்பாலும் அத்துமீறல்கள்தாம். எமது தேசத்தின் முதுகெலும்புகள் முறிந்துகொண்டிருக்கின்றன....
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty