ஆரையம்பதி சந்தையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை
29-03-2012 09:56 AM
Comments - 0       Views - 296

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பொதுச்சந்தையில் பாவனைக்கு உதவாத பழுதடைந்த மரக்கறிகள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.சிறிநாத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசிர் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆரையம்பதி பொதுச்சந்தையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே பழுதடைந்த மரக்கறிகள் மற்றும் காலாவதியான  பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பழுதடைந்த பெரிய வெங்காயம், மரக்கறிகள், காலாவதியான பிஸ்கட்டுக்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.

பழுதடைந்த மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக   மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் தெரிவித்தார்.
"ஆரையம்பதி சந்தையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty