கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகம் திறப்பு
05-06-2012 04:11 PM
Comments - 2       Views - 476

(ரி.லோஹித்)


திருகோணமலையில் இதுவரை காலமும் இயங்கிவந்த கிழக்கு மாகாண நீர்பாபாசனப் பணிப்பாளர் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அத்துடன் மாகாண அமைச்சர்களான உம்.எஸ்.உதுமாலெவ்வை, ரி.நவரெட்ணராஜா, எம்.சுபைர் ஆகியோரும், மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பி.பிரசாந்தன், கே.எல்.எம். பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாகாகண நீர்ப்பாசனப்பணிப்பாளர் பொறியியலாளர் திலகரெட்டணம் தலைமையில் நடைபெற்ற இவ் திறப்பு விழாவில், நீர்ப்பானசத் திணைக்களத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இருக்கிறது என்ற வகையில் மாகாண சபை  சார் அலுவலகங்களை மட்டக்களப்புக்கு மாற்றுவதற்கான ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
"கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகம் திறப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
sivanathan 05-06-2012 11:49 AM
மாகாண அமைச்சுக்கள் இனி மெல்ல மெல்ல மட்டக்களப்பு நோக்கி நகரும். தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது நினைவுக்கு வருகிறது.
Reply .
1
0
Ramesh 05-06-2012 04:15 PM
கிழக்கு மாகாணத்தின் மத்தி மட்டக்களப்பு. ஏன் மட்டக்களப்பில் இருந்தால் தமிழ் வாழாதா...?
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty