innerback
innerback

கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
22-07-2012 12:07 PM
Comments - 0       Views - 372

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு கலை வாணி கலாமன்ற வளாகத்தில் இடம்பெறறது.

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மு.கோனேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

மாதர் சங்கத் தலைவி திருமதி.சந்திரவல்லி ரவீந்திரன், கிராம அபிவிருத்திச் சங்க பொருலாளர் த.மோகனராஜா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஐந்து இலட்சம் ரூபாயை இக்கட்டிட நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.


"கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty