(எஸ். மாறன்)
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசத்தில் சீரற்ற கால நிலையினால்; மழையுடன் கூடிய இடிமின்னலினால் தாக்கத்தினால் பலர் சிறுகாயங்கக்குள்ளானதுடன் 100 இற்கு மேற்பட்ட தொலைக்காட்சி, களணி, மற்றும் மின்சார உபகரனங்கள் சேதமடைந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கிழக்கில் தற்போது சீரற்ற காலநிலையினால் சில நாட்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்துவருகின்றது.
புதன்கிழமை காலை 10 மணியளவில் இடிமின்னலுடன் கடும்மழை பெய்தது. இதன்போது திடீரென பாரிய மின்னல்
தாக்குதல் ஏற்பட்டபோது வீடுகளில் சமயலறையில் கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பாவித்துக் கொண்டிருந்த பெண்கள் பலர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பலவீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனபெட்டிகள் முதலானவை சேதமடைந்தன. சில வீடுகளில் மின்சார வயர்கள் எரிந்துள்ளன.
இதேவேளை பல அரச மற்றும் அரசசார்பற்ற காரியாலயங்களில் கணனி மற்றும் மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்த பலர் மின்னல் தாக்குதலினால் தூக்கி வீசப்பட்டு காயங்களுக்கு ஆளாகினர்.
வீடுகள், காரியாலயங்களில் உள்ள றிப்சுவிச்சுக்கள் செயற்படாமல் போனதுடன் மின்னலின் போது மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்தமை போன்றவை மின்னல் தாக்குதல் ஏற்பட காரணமாகும் என மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Comments
எல்லா மின் சாதனங்களும் எர்த் வாயருடன்
இணக்கபட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மற்றும் சரியான தரமான ரிப் ச்விட்ச்களை இணைத்து உங்கள் மின் இணைப்பை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்
RSS feed for comments to this post