பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் வசதியற்ற குடும்பத்திற்கு நிர்மாணித்துகொடுக்கப்பட்ட வீடு திறப்பு
13-07-2012 09:20 AM
Comments - 1       Views - 773

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கு நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீட்டின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பழைய மார்கட் வீதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த  வீட்டின் திறப்பு விழா சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், சமாதானத்திற்கான சர்வ சமய

இலங்கை பேரவையின் அம்பாறை மாவட்ட தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபை தலைவர் அல் ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி மற்றும் சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச தனவந்தகர்கள் வழங்கிய உதவிகளுடன் பைத்துஸ் ஸகாத் நிதியினையும் பயன்படுத்தி சுமார் 8 இலட்சம் ரூபா செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது."பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் வசதியற்ற குடும்பத்திற்கு நிர்மாணித்துகொடுக்கப்பட்ட வீடு திறப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
mmohideens 13-07-2012 08:47 AM
ஈமாந்தாரிகள் சுவர்க்கம் அடைவார்கள். நாமும் சுவர்க்கம் செல்ல முயற்சியில் ஈடுபடுவோம். மாஷா அல்லாஹ்.
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty