தொழிலில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் கைது
14-01-2012 02:46 PM
Comments - 1       Views - 745

 

(எம்.பரீட்)

திருகோணமலை, புடைவைக்கட்டு பிரதேசத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு சிறுவர்களை நேற்று வெள்ளிக்கிழமை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 6 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட இச்சிறுவர்களை, பாடசாலை செல்லாது கடற் தொழில், கூலித் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

புடவைக்கட்டு பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளையடுத்தே குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.எம்.தமீம் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே இச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குச்சவெளி நீதிமன்றில் நேற்ற வெள்ளிக்கிழமை இச்சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த பெற்றோர்கள் நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

"தொழிலில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
meenavan 14-01-2012 08:33 PM
வறுமையின் அகோரம் காரணமாக இருக்குமல்லவா? பள்ளிவாசல் நிர்வாக வேண்டுகோளின் பேரில் கைது நடந்தால், கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு, சமுக நல இயக்கங்களின் மூலம் பொருளாதார மேம்பாட்டு உதவிகளை பள்ளி நிர்வாகம் முன்னின்று செய்திருக்கலாமே? வறிய பெற்றோர் வழக்குகளுக்கு கறுப்பு கோட்டார்களுக்கு கட்டணம் செலுத்த எங்கே செல்வர்?
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty