தென்னமரவடிக் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் தைப்பொங்கல் நிகழ்வு
16-01-2012 09:58 AM
Comments - 0       Views - 359

 

(சி.குருநாதன்)

திருகோணமலை, தென்னமரவடிக் கிராமத்தில்மீள்குடியேறிய முதலாவது தொகுதி மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலை கொண்டாடினர்.

அகில இலங்கை தமிழர் கூட்டணியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இத்தைப்பொங்கல் நிகழ்வில் தென்னமரவடிக் கிராமத்தில் மீள்குடியேறிய 35 குடும்பங்கள் கலந்துகொண்டனர். இம்மக்கள் தென்னமரவடிக் கிராமத்தில் மீள்குடியேறிய பின்னர் நடைபெறும் முதலாவது தைப்பொங்கல் நிகழ்வு இதுவாகுமென  அகில இலங்கை தமிழர் கூட்டணியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசகருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தென்னமரவடிக் கிராமத்தில் முதலாம் கட்டமாக மீள்குடியேறியுள்ள 35 குடும்பங்களுக்கும் யு.என்.எச்.சி.ஆர். தற்காலிகக் குடியிருப்புக்களை நிர்மாணித்துக் கொடுக்கும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அவர், இக்கிராமத்தில் இரண்டாம் கட்டமாக 150 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகால யுத்தம் காரணமாக தென்னமரவடிக் கிராமத்திலிருந்து 300க்கும் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைமையேற்பட்டதெனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

"தென்னமரவடிக் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் தைப்பொங்கல் நிகழ்வு " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty