
(சி.குருநாதன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் 79 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
05.02.1933 ஆம் திகதி பிறந்த சம்பந்தன், இன்று திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் காலை வழிபாடுகளில் பங்குபற்றிய பின்னர் திருகோணமலை நகரமண்டபத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உபதலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக வந்தார். அப்போது அவருக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பொன்னாடைபோர்த்தி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா, வலிகாகமம் மேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி ஐங்கரன் நாகரஞ்சனி ஆகியோர் பொன்னாடை போர்த்தி சம்பந்தனை வாழ்த்துவதையும் நல்லூர் பிரதேச சபையின் உபதலைவர் திருமதி கோமதி ரவிதாஸ், திருமதி நாகரஞ்சனி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோர் சம்பந்தனுடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.




Comments
RSS feed for comments to this post