.jpg)
(கஜன்)
திருகோணமலை சுமேதகம பகுதியில் குடல் இறக்கம் நோய்க்கு உள்ளாகி இருந்த மான் ஒன்றுக்கு நேற்று புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் மிருக வைத்திய அதிகாரிகள் இந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதேவேளை, சங்கமித்தை பகுதியில் பிளாஸ்திக் பைகளை உட்கொண்டு அவதிக்கு உள்ளான மற்றொரு மானுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
.jpg)

