திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான சி.குருநாதனுக்கு பாராட்டு
19-03-2012 09:30 AM
Comments - 1       Views - 454

 

(கஜன்)

திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான கலாபூஷனம் சின்னையா குருநாதனின் 53 வருட ஊடக தறை சேவையை  கலை இலக்கிய நண்பர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வி சமூகத்தினர் இணைந்து பாராட்டினர்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. சட்டத்தரணி ஆ.ஜெகசோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தினரின் ஊடக சாகரம் எனும் விருதும் குருநாதனுக்கு இதன்போது வழங்கப்பட்டது. அத்துடன் ஊடகவியலாளர் சின்னையா குருநாதின் பத்திரிகை அனுபவங்கள் பற்றிய சிறு தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான சி.குருநாதனுக்கு பாராட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
nallathamby kumanan 21-03-2012 01:20 PM
திருமலை மண்ணில் நீண்டகாலம் ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும்
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty