காசநோய் விழிப்புணர்வு நடைபவனி
24-03-2012 08:50 AM
Comments - 0       Views - 350

(சி.குருநாதன்)

சர்வதேச காசநோய்  தினத்தையொட்டி திருகோணமலை மாவட்ட சுகாதாரத் திணைக்களம்  விழிப்புணர்வு நடைபவனியை நேற்று வெள்ளிக்கிழமை  நடத்தியது.

திருகோணமலை மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் பணிமனைக்கு முன்பாக  ஆரம்பமான இந்த நடைபவனி திருகோணமலை அரசினர் பொதுவைத்தியசாலையைச் சென்றடைந்தது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன், திருகோணமலை பொதுவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன், காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரி.சுரேஷ்குமார் இந்த நடைபவனிக்கு தலைமை வகித்தனர்.

"காசநோய் விழிப்புணர்வு நடைபவனி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty