திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான இளைஞர் காங்கிரஸின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு
08-06-2012 02:19 PM
Comments - 0       Views - 497
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவ ஆளுமைகளையும் சமூக பற்று மற்றும் இலட்சியங்களையும் வளர்க்கும் நோக்கில் அரசியல் தலைவர்களினாலும் புத்திஜீவிகளினாலும் முக்கிய பல தலைப்புகளில் சிறப்புரைகள் மற்றும் விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் "முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களும் இளைஞர்களின் பங்களிப்பும்" என்ற தொனிப்பொருளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி "முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும் பயணமும்" என்ற தலைப்பிலும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத் "முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கமும் அதன் பின்னணியும்"  என்ற தொனிப் பொருளிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் "முஸ்லிம் சமூகப் புனரமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பும்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.  

இவர்களுடன் தென் கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தரும் அரசியல்துறை பேராசிரியருமான  எம்.எல்.ஏ.காதர் "முஸ்லிம் இளைஞர்களின் சமூகப் பொறுப்பு" எனும் தொனிப்பொருளிலும் தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெஸீல் "இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இளைஞர்களும் அரசியல் தலைமைகளும்" என்ற தொனிப் பொருளிலும் விரிவுரையாற்றவுள்ளனர்.
"திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான இளைஞர் காங்கிரஸின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty