கொட்டதெனியாவ பகுதியிலுள்ள பனகல தோட்டத்தில் கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து 10 கிலோகிராம் நிறையுடைய சி – 4ரக வெடிபொருட்கள் நேற்று புதன்கிழமை மாலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கிணற்றை துப்பரவு செய்த தோட்ட மக்கள், அக்கிணற்றில் வயருடன் பையொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மிரிகம விமானப்படைப் பிரிவினர் இக்குண்டை செயலிழக்க வைத்தனர். நீர் உட்புகாத பெட்டி ஒன்றினுள் இக்குண்டு மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர். (புஷ்பகுமார மல்லவராய்ச்சி)

