நாய் கவ்விச் சென்ற சிசுவின் சடலம்; சாமிமலையில் பெண் சந்தேகத்தில் கைது
06-03-2012 12:27 PM
Comments - 0       Views - 372

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

சாமிமலை, அவரவத்தைத் தோட்டத்தில் பிறந்த உடன் புதைக்கப்பட்ட சிசுவொன்றின் சடலத்தினை மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அவரவத்தைத் தோட்டத்திலுள்ள தேயிலைச் செடிகளுக்கிடையில் புதைக்கப்பட்டிருந்த இந்தச் சிசுவின் சடலத்தினை நாயொன்று வாயில் கவ்விக்கொண்டு இழுத்து வந்ததைக் கண்ட பொதுமக்கள் பிரதேசத்தின் கிராமசேவகருக்கு அறிவித்துள்ளனர்.

பின்பு  இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதுடன் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சம்பவ இடத்துக்கு விரைந்த ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் ராமமூர்த்தி, சடலம் தொடர்பான மரண விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து அச்சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

"நாய் கவ்விச் சென்ற சிசுவின் சடலம்; சாமிமலையில் பெண் சந்தேகத்தில் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty