டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் மாபெரும் சிரமதான நடவடிக்கையும்
20-09-2012 11:51 AM
Comments - 0       Views - 209

(ஆர்.கமலி)


ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் மாபெரும் சிரமதானமும் இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது.

முதற் கட்டமாக இன்று காலை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது.

இவ் ஊர்வலத்தில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் கீழ் வரும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் சமூகத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்படத்தக்கது.

"டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் மாபெரும் சிரமதான நடவடிக்கையும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty