கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸ் அனர்த்தத்திற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படும்: பிரபா கணேசன் எம்.பி.
19-03-2012 06:09 PM
Comments - 0       Views - 264

 

கொழும்பு கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸ் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பலியான தலவாக்கலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் காயமுற்றவர்களுக்கும் சேதமான சொத்துக்களுக்கும் உரிய நஷ்டயீடு பெற்றுக் கொடுப்பதற்கு இடர்முகாமைத்துவ அமைச்சினூடாக தான் ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். 

இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

குப்பை அகற்றும் லொறியின் சாரதியின் கவன குறைவினால் ஏற்பட்ட விபத்தில் தலவாக்கலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தின்போது,  சொத்துக்கள் சிலவும் சேதமாகியுள்ளன. இதை இடர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் திலிப் விஜேசேகரவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்ததாகவும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மேலும் விபத்திற்கு காரணமாக இருந்த வாகனத்தின் ஸ்தாபனத்திடம் உரிய நஷ்டயீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸ் அனர்த்தத்திற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படும்: பிரபா கணேசன் எம்.பி." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty