வெள்ளிக்கிழமை, 25 மே 2012

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட இரவு 10 மணிக்கு பின் அனுமதி இல்லை

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் ஒயாமடுவில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட இரவு 10 மணிக்குப் பின் வருவோர் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணிவரை கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதோடு இறுதி நேரத்தில் நுழைவோர் அதிகாலை வரை கண்காட்சி வளாகத்தினுள் தரித்து நிற்பதனால் கண்காட்சி கூடங்களில் கடமையாற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் சேவையாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Views: 279

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.